இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை இன்று பொருளாதார நெருக்கடி நிலைக்குள் சிக்கி தவித்து வருகின்றது
இவ்வாறான நிலையில் கடந்த 6 மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றும் பெறாமல் திரும்பி செல்லும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறை சார் செயற்பாடுகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்து வருகின்றன.
இதேவேளை போத்தல்கள் மற்றும் கான்களில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது துவிச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றிஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் வண்டியும் ஒருநாள் சைக்கிளில் ஏறும் சைக்கிளும் ஒருநாள் வண்டியில் ஏறும் என குறித்த சமம்பவம் தொடர்பில் மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.