யாழ். தொண்டைமானாறு கடற்பரப்பில் படகு ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 சாக்குகளில் பொதியிடப்பட்ட சுமார் 250 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த போதே இன்று (26) அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
வளலாயைச் சேர்ந்த 22, 30 மற்றும் 36 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.