
தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகத் தயாரில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
ஆனால் எனது பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளையும் முடிக்காமல் வெளியேறமாட்டேன். தோல்வியுற்ற ஜனாதிபதியாக நான் பதவியிலிருந்து வெளியேற முடியாது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவைப் எதிர்பார்த்துள்ளேன்.
இந்திய மற்றும் சீன தலைவர்களுக்கு தனித்தனியாக உதவி கோரி கடிதமும் அனுப்பியுள்ளேன். மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளேன்.
கச்சாய் எண்ணெய் பெற்றுக் கொள்ள நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயல்கின்றேன்.
சர்வதேச நாணய நிதியத்திடம் முன்னதாகச் சென்றிருக்கவேண்டும். ஒரு வருடத்துக்கு முன்னர் சென்றிருந்தால் இந்த நிலைமை தோன்றியிருக்காது என்றார்.




