
நல்லாட்சியின் நிர்வாகத்தை இன்று மொட்டு கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு டொலர் தேவை என்று பிரதமர் தமது உரையில் கூறியபோதும் அந்த டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அவர் கூறவில்லை என்று லச்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையை பொறுத்தவரையில் இன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நம்பிக்கையைக் கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை.
கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளமுடியாது என்றார்.
லச்மன் கிரியெல்லயின் கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டார்.
அதுவரை இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்தே டொலர்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இதனை தவிர ஜப்பான், சீனா உட்பட்ட நாடுகளை கொண்ட மாநாட்டை கூட்டி டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியிருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

