நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் சுய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபை உத்தியோகத்தர் அனைவருக்கும் மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உத்தியோகத்தர்களிற்கு மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஆயிரம் கத்தரிச் செடிகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
இதன்போது மாநகர சபையின் தற்போதை ஆணையாளர் த.ஜெயசீலன் முன்னாள் ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோருக்கும், ஏனைய உத்தியோகத்தர்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டில் ஏற்படக் கூடிய பொருளாதார நெருக்கடி காலத்தில் மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள்ளும் மாவட்டம் முழுமையாகவும் இத் திட்டத்தை கொண்டு செல்லும் முயற்சியாக மக்களை முன்கொண்டு செல்லும் உத்தியோகத்தர்களிற்கு இவை வழங்கி வைக்கப்பட்டது.
இதேநேரம் கிராமங்கள் தோறும் இதனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கான நிதி அனுசரணையை கனடா நாட்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டனர்.


பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

