மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

கொழும்பு, ஜுன் 07

மின்வெட்டு 2 மணி 15 நிமிடங்களாக குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர் இதற்காக புதிய வழிமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதன்படி மூன்று நாட்களுக்கு பகல் வேளையிலும் இரவு வேளையிலும் என மாறி மாறி மின்சாரத்தை துண்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.

ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு பகலில் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் துண்டிக்கப்பட்டால், அதே பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவில் துண்டிக்கப்படும்.
குறித்த பிரேரணைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *