தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு சுய சார்பு கொள்கையே காரணம்- பிரதமர் மோடி

இந்தியாவின் சுய சார்பு கொள்கையே தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றமைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடக ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருக்க வேண்டும்.

மேலும், உலகின் பெரும்பாலான மக்கள் தொகைக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை.

இத்தகைய நிலைமையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம் என்றால், அது சுய சார்பு கொள்கையால்தான்.

நாட்டின் வயதுவந்த மக்களில் 69 சதவிகிதம் பேர், குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். 25 சதவிகிதம் பேர் இரண்டு தவணையை எடுத்துள்ளனர்.

அந்தவகையில் டிசம்பர் இறுதிக்குள் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும், தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply