மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முழு நாட்டையுமே முடக்குவதன் மூலம் அழுத்தம் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(07)தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அப்பதிவிலே,
பொருட் தட்டுப்பாடு, தொடரான விலையேற்றம், என்பவற்றால் மக்கள் மடியும் இந் நிலைமைக்கு ராஜபக்ச அரசாங்கத்தின் பிழையான நிருவாகமும் ஊழலுமே காரணமாகும்.
வாழ்வா? சாவா? என்ற அபாய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ள இம் மக்களின் துயர் துடைப்பதோடு எதிர்கால சந்ததிகளுக்கேனும் வளமான நாட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம்.
எனவே இந்நிலமைக்கு காரணமான ஜனாதிபதியை வீட்டிற்கு அனுப்புவதோடு புதிய அரசாங்கத்தையும் அமைக்க வேண்டுமாயின் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவதோடு தமது வாகனங்கள் அனைத்தையும் வீதிகளிலேயே விட்டுச் செல்வதன் மூலம் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து அழுத்தங்களை வழங்குமகின்ற இறுதி முயற்சியை முன்னெடுக்க நாட்டு மக்களும் எதிர்க் கட்சிகளும் உடனடியாக களமிறங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்