உலக நாடுகளில் இலங்கையின் நாடாளுமன்றமே அபூர்வ நாடாளுமன்றமாகும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
செங்கோலை துாக்கிச்சென்றவர் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். செங்கோலை மதிக்காதவர் சபை முதல்வராகியிருக்கிறார்.
நாடாளுமன்றில் மிளகாய் துாள் தாக்குதலை நடத்தியவர் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். கடூழிய சிறைத்தண்டனை பெற்றவர் அரசாங்கக் கட்சியின் பிரதம அமைப்பாராகிறார்
எனவே ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கையில் செயற்படும் நாடாளுமன்றம் அபூர்வமான நாடாளுமன்றமாகும்.

இதற்கிடையில் இலங்கையில் 27 வீதமானோரே எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய வங்கியின் ஆளுநரின் பதவி இந்த மாத இறுதியில் முடிவடைவதாக தெரிவித்த அவர், மாத இறுதி வரை பார்த்துக்கொண்டிருக்காமல், தற்போதே மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்