சிறுவர்களின் ஒன்லைன் கல்விக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ ஆதரவு

ஒவ்வொரு பிள்ளைக்கு இடைவிடாத கல்வியைத் தொடரும் வாய்ப்பை வழங்குவது எனும் யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ இன் கொள்கையின் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஒன்லைன் கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

397 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு டப்லெட்கள் மற்றும் மடிக்கணனிகள் விநியோகிக்கப்பட்டிருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த 10,632 சிறுவர்களை உள்வாங்கி யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் இதர ஏழு நிறுவனங்களின் அனுசரணையில் இவை அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.

தொற்றுப் பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வியில் இடைவெளி நீடிக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் முறையில் கல்வியைத் தொடர வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. பல சிறுவர்களுக்கு கணனி அல்லது டப்லட்  வசதிகள் இல்லாத சூழல் காணப்படுகின்றமையால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனது.

“அனைத்தையும் விட முன்னர் சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்த தேசிய சிறுவர் தின நிகழ்ச்சிகளின் அங்கமாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்துக்கு 50 சாதனங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் பங்களிப்புச் செய்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸின் Sisumaga+ என்பது, பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள உதவும் காப்புறுதித் தீர்வாக அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு பிள்ளைக்கும் தடங்கலில்லாத கல்விக்கான உறுதி மொழியை வழங்குவதாகவும் உள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது.

ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது.

76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *