முன் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

முன் பாடசாலைகளை இம்மாத இறுதிக்குள் திறப்பதே தமது இலக்கு என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து படிப்படியாக நாட்டை மீள திறக்க வேண்டிய நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அதன் ஒரு அங்கமாக முன் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply