பசித்தால் மண்ணை சாப்பிட சொல்லும் அளவுக்கு அரசின் நிலைமை உள்ளது என நாடளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
சபையில் பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இன்று உரையாற்றினார்.
பிரச்சினை ஏற்படும் ஏற்படும் என கூறிய அவர் தீர்வை முன்வைக்கவில்லை.தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவி கிடைத்தது.
அதில் தமிழக தொப்பிள் கொடி உறவுகளான மலையக மக்களுக்கு கிடைத்ததா என்று யாரும் நினைக்கவில்லை.
நாட்டுக்கு உணவு கொடுக்கும் வல்லமை மலையக மக்களுக்கு உள்ளது.ஆனால் அவர்களை பற்றி யாருமே சிந்திக்கவில்லை.
அவர்களின் நிலங்கள் துண்டாடப்பட்டுள்ளது.அவர்களிடம் நிலங்களை வழங்கிப் பாருங்கள் பயிர்களை விளைவித்து தருவார்கள்.
எல்லாவற்றுக்கும் வெளிநாட்டில் கையேந்த உங்களுக்கு வெட்கம் இல்லையா என்றார்.
பிற செய்திகள்