
பிரபாகரனின் காலத்தில் தமிழ் மக்கள் 14 ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டு சந்தோசமாக வாழ்ந்தார்கள்,யாரும் பஞ்சத்தால் சாகவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் பஞ்சம் என்று ஏற்பட்டால் முதலில் சாவது மலையக மக்கள் தான்.அதன் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சாவார்கள்.
அன்று தலைவர் பிரபாகரன் காலத்தில் வன்னியில் குளத்தையும் வயலையும் நம்பி வாழ்ந்தார்கள்.14 ரூபாய்கு அரிசி வாங்கி செழிப்பாக வாழ்ந்தார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புலம்பெயர் தேசம் பல பில்லியன் ரூபாய்களை வழங்க தயாராக உள்ளது.
நீங்கள் வடக்கு கிழக்கு மக்களுக்கு சுய நிர்ணயணத்தை வழங்கி ,அவர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க முடியும்.
வடக்கு கிழக்குக்கு என்று இடைக்கால பொருளாதார நிர்வகிப்பு சபை ஒன்றை நிறுவி நடாத்திச் செல்ல முடியுமா என்றார்.
பிறசெய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்