
கொழும்பு,ஜுன் 07
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் Jagath Kodithuwakku நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் Jagath Kodithuwakku நாளை முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை இராணுவத்தின் 60 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் Jagath Kodithuwakku நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.