
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக குறைநிரப்பு யோசனையை பிரதமர் சமர்ப்பித்துள்ளபோதும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.
ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளால், பொதுமக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்றும் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
9 மாகாணங்களையும் அபிவிருத்தி செய்யும் முகமாக அந்தந்த மாகாணங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏன் அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது?
அவ்வாறு செய்கின்றபோது மத்திய அரசாங்கத்துக்கான நிதிச்சுமையை குறைக்கமுடியும் என்றும் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




