கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தின் செயற்படுத்தல் அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
தனியார் சட்ட தகராறு காரணமாக ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பில் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாக செயற்படுத்தல் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சட்டத்தரணிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட பிரதம நீதியரசருக்கு அறிவிக்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.