
கொழும்பு,ஜுன் 07
ரஷ்யாவின் Aeroflot விமானம் தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டிப்பட்டிருந்த நீதிமன்ற அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரியே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது பொருத்தமானதாகும் என, நீதியமைச்சினால் பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Aeroflot நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று, இலங்கையில் உள்ள ரஷ்யப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக அண்மையில் நாட்டுக்கு வருகை தந்தது குறித்த விமானம் தொடர்பில் அயர்லாந்து நிறுவனமொன்றினால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு, குறித்த விமானத்திற்கு, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த தடையுத்தரவு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், விமானம் மீதான தடையுத்தரவு நேற்று நீக்கப்பட்டது. அதற்கமமைய, திங்கட்கிழமை மாலை வேளையில், குறித்த விமானம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரம் நோக்கிப் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.