கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா- அலுவலக பணிகள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொடிகாமத்தினைச் சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு  எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை), பிரதேச செயலகச் செயற்பாடுகள் அனைத்தும்  இடைநிறுத்தப்பட்டு அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த ஊழியர்களின் பி.சி.ஆர்.முடிவுகள் வெளிவந்ததன் பின்னரே பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். எனினும் அத்தியாவசிய தேவைகளை அரச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *