
யாழ்ப்பாணம்,ஜுன் 07
இன்று வடக்கில் விவசாயிகள், மற்றும் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
எனினும், மண்ணெண்ணெய் போதியளவு கிடைக்காமையினால் வடக்கு மாகாண மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.