யாழ்ப்பாணம்,ஜுன் 07
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் அதிகரிக்ககூடும் என்ற அச்சத்தில் மக்கள் பல இடங்களில் முண்டியடித்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டில் நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை பாரிய அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக பரவிய தகவலையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பெற்றோலை பெற்றுக் கொள்ள மன்னாரில் வாகன உரிமையாளர்கள் முண்டியடித்துக் கொண்டனர்.
