மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பில்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் ஆர்வமாக தடுப்பூசியை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில்,  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை), மட்டக்களப்பு பாரதி வீதி அருணோதயம் வித்தியாலயம், சிசிலியா பெண்கள் உயர்பாடசாலை, கல்லடி சிவானந்தா வித்தியாலயம், சின்ன ஊறணி சரஸ்வதி வித்தியாலயம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் தடுப்பூசி  செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *