மருந்து தட்டுப்பாட்டை போக்க லண்டனில் நிதி திரட்டும் இலங்கை இளைஞர்

லண்டனில் உள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க நிதி திரட்டும் நோக்கில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன் வாழ் இலங்கை இளைஞரான மிதில வனசிங்க என்ற இளைஞரே பாரிஸ் வரை சைக்கிளில் பயணித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் மருந்து தட்டுப்பாடினை நீக்குவதற்காக 10,000 பவுண்ட் சேகரிப்பதே தனது பிரதான திட்டம். இலங்கை மிகவும் மோசமான ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு வருகின்றது. இலங்கையை மீட்க ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.

இலங்கையில் மருந்துகள் இல்லாமல் மக்கள் மரணிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதனை அனைவரும் அறிந்துள்ளோம். நான் இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்து 12 வருடங்களாகுகின்றது.

இலங்கை எனது தாய் நாடு. இலங்கை மீதான எனது அன்பு ஒரு போதும் குறையாது. அதோடு நாட்டின் ஊழல் மிக்க அரசியல்வாதிகளின் செயலால் மக்கள் மரணிப்பதனை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அதற்கமைய நாட்டின் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் கருப்பு சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து சைக்கிளில் பாரிஸ் செல்கின்றேன்.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஏனைய இலங்கையர்களும் நாட்டுக்காக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

10000 பவுண்ட் நிதி திரட்டும் என்னுடைய நடவடிக்கையில் அனைவரும் இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். எங்கள் மக்களுக்காக ஏதாவது ஒன்றை முழு மனதுடன் செய்வோம் எனவும் மிதில வனசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்காக லண்டனில் நிதி திரட்டும் இலங்கை இளைஞர்

மேலும் ‘ஹீல் சிறிலங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உதவி செய்ய கூடியவர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *