இன்றும் நெடுங்குள வீதியின் கால்வாயை தூர்வாரி துப்புரவாக்கும் பணிகள் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் வழிகாட்டலில் நகரசபையால் முன்னெடுக்கப்பட்டன.
நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அவர்களின் கள நெறிப்படுத்தலுடன் பணிகள் நடைபெற்றன.
இதன்போது கால்வாய் நீர் வெளியேற்றத்திற்குத் தடையாகவிருந்த சில நிர்மாணிப்புக்கள் Jcb இயந்திர உதவியுடன் உடைத்து அகற்றப்பட்டன.
வீதியின் குறிப்பிட்ட பகுதியில் சேதமடைந்திருந்த மதகு அகற்றப்பட்டு புதிய மதகும் பொருத்தப்பட்டது.
திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நகரசபையினால் இச்செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

