கொழும்பு, ஜுன் 07
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி மூன்று நாட்களுக்கு பகல் வேளையிலும் இரவு வேளையிலும் என மாறி மாறி மின்சாரத்தை துண்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதாவது ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு பகலில் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் துண்டிக்கப்பட்டால், அதே பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவில் துண்டிக்கப்படும்.
குறித்த பிரேரணைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் புதன்கிழமை 2 மணி 15 நிமிட மின் துண்டிப்பு அமல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ((PUCSL)) அறிவித்துள்ளது.





