கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் மா.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பெருநிலப்பகுதியில் உள்ள முனைக்காடு கிராமத்தில் பிறந்த இவர், ஆசிரியர் சேவையில் இணைந்து அதிபர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துறைதலைவர், கலை, கலாசார பீடாதிபதி ஆகிய பதவிகளை வகித்தமையுடன், இன்றும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், இந்திய பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு விரிவுரையாளராகவும் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர், படுவான்கரைப்பகுதி கல்வியில் எழுச்சி பெறவேண்டும் என்பதனை நோக்காக கொண்டு ஒளிக்கல்லூரி அமைப்பினை ஸ்தாபித்து செயற்பட்டமையும் எடுத்துக்காட்டத்தக்கது