எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் தீவிரமடைந்து தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கீழ் மட்ட தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் பாரிய தொற்றுநோயாக பரவுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், மருத்துவமனைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நாடு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குப்பைகளை முறையாக அகற்றாமையால் சுற்றுச்சூழலில் குப்பைகள் குவிந்து நுளம்புகள் பரவுவதற்கு காரணமாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த தேசிய அபாயத்தை உணர்ந்து, குறைந்தபட்சம் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஒரு தீவிர தேசியப் பொறுப்பாக கருதுமாறு சுகாதாரத் துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் 26060 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்ததாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்