
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்த பதவி நீக்கம் இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




