
16 ஆடுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லுணுகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்றை, பொலிஸார் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் 16 ஆடுகள் இருந்துள்ளன. இதையடுத்து மிருக வதை சட்டத்தின் கீழ், 32 வயதுடைய லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் லுணுகலை ஜனதா புறப் பகுதியிலிருந்து பிபிலை நோக்கி ஆடுகளைக் கொண்டு சென்றார் எனவும், நபரிடம் ஆடுகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிபி பத்திரம் இருந்த போதிலும் அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடுகளை விடவும் அளவுக்கு அதிகமான ஆடுகளைக் கொண்டு சென்றமையாலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர், பதுளை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

