
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நிலை காரணமாக பல்வேறு உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மது பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் யாழ்ப்பாண கள்ளுக்கு திடீரென பெரும் மவுசு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பெரும்பாலான கள்ளு தவறணைகளுக்கு அங்கத்தவர்களால் வழங்கப்படும் கள் சிறிது நேரத்திலேயே நுகர்வோரால் கொள்வனவு செய்யப்பட்டு தீர்ந்துவிடுவதாக கள் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேவேளை சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




