
கொழும்பு, ஜூன் 8:
மே 9 சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த முதலாம் திகதி சந்தேகநபர்களாக பெயரிட்டுள்ளது.




