
நாட்டின் கோதுமை மாவின் தட்டுப்பாட்டின் காரணமாக கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசிமாவினை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் யாழ் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ;
தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையில் கோதுமை மாவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. எனவே இந்த கோதுமை மாவிற்கு மாற்றீடாக அரிசிமாவினை மக்கள் பாவனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் அரிசிமாவினை பச்சையாக பயன்படுத்தி குறிப்பாக வன்னி மாவடடம் ,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இம்மாவினைப் பயன்படுத்தி இடியப்பம் ,பிட்டு ஆகிய உணவுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் இன்று மக்கள் உள்ளார்கள்.
அரசி ஆலைகளிலும், சிறிய உணவு தொழிற்சாலைகளிலும் அரிசி மாவினை விற்பனை செய்து வருகிறார்கள்.எனவே கோதுமை மாவுடன் அரிசி மாவினை ஒப்பிடுகையில் சத்து நிறைந்ததாக உள்ளது. தீட்டல் பச்சரிசியானது நாட்டில் கூடுதலான அளவில் இருப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய திணைக்களமும் தெரிவித்துள்ளது ,ஆகையால் கோதுமை மா தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்துகொள்ள அரசிமாவின் பயன்பாட்டினை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
அதேசமயம் நாட்டில் மரக்கறி எண்ணெய்யும் தாட்டுப்பாடாக உள்ளது. இதனை கொள்வனவு செய்து கொள்ள அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது. இந்த மரக்கறி எண்ணெய்யினை உற்பத்தி செய்துகொள்ள பலர் குடிசைக்கைத்தொழிலினை மேற்கொண்டுள்ளார்கள்.
தற்போதையய பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளோம் .இதனால் வட மாகாண மக்களின் பொருளாதாரம் மேம்படும்.எனவே வட மாகாண மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு
கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.




