
தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய கோரி நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 17 இலங்கை தமிழர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றிலிருந்து உண்ணாவிரதம் இருந்த 17 இலங்கை அகதிகளுடன் சேர்த்து புதிதாக 4 பேர் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் எங்களது விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
அத்துடன் சாகும் வரை இந்த உண்ணாவிரத போராட்டம் விடுதலைக்கான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்




