சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே மீன்பிடிப்பது தொடர்பான ஜப்பானுடனான ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தியது

குரில் தீவுகளுக்கு அருகே ஜப்பானிய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒப்பந்தத்தின் கீழ் பணம் செலுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டி ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பான் தரப்பு அதன் அனைத்து நிதிக் கடமைகளையும் நிறைவேற்றும் வரை 1998 ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது.

ஓகோட்ஸ்க் கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் குறித்த தீவுக்கூட்டத்தை மொஸ்கோ தனக்கு சொந்தமானது என்று கருதுகிறது.

அதே சமயம் டோக்கியோ நான்கு தீவுகளும் ஜப்பானுக்கு சொந்தமானது என்றும் போரின் இறுதி நாட்களில் சோவியத் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது என்றும் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *