திருகோணமலை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி!

திருகோணமலை – சல்லி அம்பாள் மகா வித்தியாலய மாணவியான அருட்செல்வன் பிரதீஷா என்பவரே தேசிய ரீதியான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்

கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்றுவரும் கனிஷ்ட தேசிய தடகள போட்டியில் திருகோணமலை சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தில் இருந்து முதன் முதலாக மாணவர்கள் இருவர் பங்குபற்றி இருந்தார்கள்.

இதில் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற 3000m Steeplechase நிகழ்வில் அருட்செல்வன் பிரதீஷா தேசிய மட்ட கனிஷ்ட தடகள போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதில் பயிற்சி பெற்றுக்கொள்ள தரமான மைதானம் இல்லாது, அந்த நிகழ்ச்சிக்குரிய உபகரணங்கள் இல்லாது, கிடைத்த இடத்தில் கிடைத்த பொருட்களை கொண்டு தனது பயிற்சியை மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *