புகையிரத கட்டணங்களை அதிகரிக்க வேண்டும்: பந்துல குணவர்தன

கொழும்பு, ஜுன் 08

புகையிரத கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்து கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும்அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக புகையிரதம் இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபாய் செலவாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

500 ஆசனங்களுக்கு ஒரு பயணியிடம் இருந்து 2000 ரூபாய் அறவிடப்பட்டாலும் 1 மில்லியன் ரூபாய் பெறப்படுவதாகவும் அதற்கமைய சுமார் 300,000 ரூபாய் நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *