மின் கட்டண சுமையையும் மக்கள் மீது திணிக்க முடியாது! மின்சக்தி அமைச்சர் அதிரடி

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, இலங்கை மின்சார சபையுடன் முரண்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இலங்கை மின்சார சபைக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை மின்சாரசபை உதவவில்லை என தெரிவித்த அமைச்சர், மின் கட்டணங்களை நூற்றுக்கு 300 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த யோசனையை தான் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையினர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைத் தொடர அனுமதிக்க வேண்டும் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்க வேண்டும், மாறாக தங்கள் சொந்த சம்பளத்தை மாத்திரம் அதிகரித்துக் கொள்கின்றனர்.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அவர்களது சம்பளம் 25% அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது உற்பத்தியில் செலவுக் குறைப்புக்கான திட்டங்கள் எதுவும் இல்லாததால், அவர்களின் சம்பளம் மற்றும் உற்பத்தி செலவுகள் நுகர்வோர் மீது வைக்கப்படுவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *