ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பதாயிரம் ரூபா என்ற வரம்பில் உள்ளது.
அரசு விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளாலும், சமீபகாலமாக வரி உயர்த்தப்பட்டதாலும் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 90,000 என்ற வரம்பை விரைவில் எட்டும் என விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த காலங்களில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே சமயம், தொலைபேசிகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதால் இலங்கை மக்கள் தொலைபேசி கொள்வனவினை தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விற்பனை ஏதும் இல்லாமலும் சில தொலைபேசி விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




