
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போது, நாட்டில் சர்வ கட்சியொன்றை உருவாக்கினால் மாத்திரமே தாங்கள் உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.
எனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்