
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் எந்த நாட்டிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர் என்ற தகவலை இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நம் நாட்டிற்கு கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 562 பேர் இலங்கை வந்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்திலிருந்து 3 ஆயிரத்து 723 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்