
மின்சார சட்ட திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு முதல் இவ்வாறான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்