இலங்கைக்கு எந்நேரமும் உதவ தயார்-இந்திய தூதர் உறுதி!

இந்தியா இலங்கைக்கு என்றும் நட்பு நாடாகவும் அண்டை நாடாகவும் இருக்கும் இந்த சமயம் மட்டுமல்ல எந்த தேவைகள் வந்தாலும் அதனை பூர்த்தி செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக சமிபத்தில் சென்னை வந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்ததாக இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமையன்று  (7) மாலை இந்திய தமிழக அரசின் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது அரிசி பால்மா என்றில்லாமல் எரிபொருள்,மருந்துப் பொருட்க்கள் என பலதரப்பட்ட நிவாரண சேவைகளை செய்துகொண்டு வருகின்றோம் நீண்டகாலத்தில் முதலீடு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதுதான் அடுத்தகாலத்திட்டம் பொருளாதார மேம்பாட்டுக்காவும் தொடர்ந்து செயற்படப்போவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *