
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் பாவனையாளர் அதிகாரசபையினால் இன்று திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குடாநாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்கள் மற்றும் எரிபொருள் பதுக்கல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் யாழ்.மாவட்ட செயலரின் பணிப்பின் கீழ் மாவட்ட பானையாளர் அலுவலகள் அதிகார சபையால் இன்று யாழ்.குடாநாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
மேலும் எரிபொருள் விற்பனை நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் இதன் போது கண்காணிக்கப்பட்டது.