கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது – வர்ணகுலசிங்கம்

தமிழகத்தில் உள்ள 2000 விசைப்படகுகளை நிறுத்தினால் இந்தியா எங்களுக்கு வழங்கிய உதவியின் இரண்டு மடங்கை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குவோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

தொண்டமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே நா.வர்ணகுலசிங்கம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் நிவாரண பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது. கச்சதீவை பெறுவதாக இருந்தால் எங்களின் பிணங்களை தாண்டியே பெறவேண்டும்.

தமிழகத்திலுள்ள விசைப்படகுகளால் தான் எமக்கு பிரச்சினை. நாட்டுப் படகால் எமக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. விசைப்படகுகள் நிறுத்தப்பட்டால் இரண்டு பகுதி மீனவர்களும் இணைந்து பேசி கடற்றொழிலை செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *