உலகிலே அதிகளவு இராணுவத்தினரை வைத்திருக்ககூடிய 14 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது. இந்த பெரும்படை தேவைதானா? இதற்கு சிங்கள தரப்பினர் யாருமே வாய் திறந்து பேசவில்லை, இந்த நாட்டின் வருமானத்தில் கால் பங்கினை விழுங்கும் இந்த படையினரை யாருக்கு எதிராக போராட வைத்துள்ளீர்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க. சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமே நாட்டினை இந்த நிலைமைக்கு கொண்டு வர காரணம், பெருமளவு இராணுவத்தினரை வைத்திருக்கக்கூடிய அவசியம் இல்லை.
உலகிலே அதிகளவு இராணுவத்தினரை வைத்திருக்ககூடிய 14 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது. இந்த பெரும்படை தேவைதானா? இதற்கு சிங்கள தரப்பினர் யாருமே வாய் திறந்து பேசவில்லை, இந்த நாட்டின் வருமானத்தில் கால் பங்கினை விழுங்கும் இந்த படையினரை யாருக்கு எதிராக போராட வைத்துள்ளீர்கள்.
கடந்த காலத்தில் இருந்தே இந்த அரசாங்கம் தவறான முடிவுகள், தவறான கொள்கைககளை கொண்டுள்ளது.
நீங்கள் திருந்தி விடடீர்களா? வரலாற்றினை கற்றுள்ளீர்களா? கற்றுக்கொள்ளவிட்டால் மீண்டும் மீண்டும் இந்த தவறினை விட போகிறீர்கள், நாட்டினை பண வீக்கத்திலேயேதான் வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்.
21ஆவது திருத்தம் என்பது மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இது நாட்டினை பொருளாதார ரீதியில் முன்னேற்ற பயன்படும்.
மேலும், கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? இலங்கை அரசாங்கம் அதனை கொடுப்பதற்கு தயாராக உள்ளதா? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது. எனவே இதனை பிரச்சனையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை.
கச்சதீவினை இலங்கை அரசாங்கம் கொடுக்கும் எனில், அதற்கு தமிழ் மக்களுடைய ஒப்புதல் குறித்து பேச வேண்டும். ஆகவே இதற்கான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை.
இந்த விடயமானது ஊடகங்களின் பேசுபொருளாக காணப்படுறதே தவிர, இரு அரசாங்கமும் இது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பதே யதார்த்த உண்மையாகும். எனவே எடுகோள்களை ஒரு பிரச்சனையாக எடுக்க வேண்டாம், அப்படியாக இருக்கட்டடும். என்றார்
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்