
இந்திய அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் தனது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1999 இல் 16 வயதில் இந்திய மக்களின் அணிக்காக விளையாடத் தொடங்கிய மிதாலி ராஜ், அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீராங்கனையாக தொடர்ந்தும் பிரகாசித்துவந்தார்.
12 டெஸ்ட், 232 ODIகள் மற்றும் 89 T20 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய அவர், இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்து சென்றார்