வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் 25 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலேயே 25 பேருக்கு தொற்று உறுதியானதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தொற்று உறுதியானவர்கள் பணியாற்றிய வர்த்தக நிலையங்களை அடையாளம் கண்டு, தொற்று நீக்கும் நடவடிக்கைளை வவுனியா பொதுசுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.