இந்திய அரசாங்கத்தின் உதவிகள் அனைவருக்கும் சமமாகவே வழங்கப்படுகிறது- தூதர் உறுதி!

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படுவதாகவும் எந்த பிரிவினையையும் இந்திய அரசாங்கம் பார்ப்பதில்லையெனவும் இலங்கைக்காக இந்திய துணைத்தூதவர் எம்.நடராஜ் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான யாழ் துணைத்தூதவர் எம்.நடராஜ் நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

இந்நிலையில் இன்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம் செய்தார்.

விஜயம் செய்த துணைத்தூதுவரை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கெனடி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய துணைத்தூதுவர் நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

பல மில்லியன் ரூபா செலவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அமைக்கப்படவுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக குறித்த ஒன்றுகூடல் மண்டபத்தினை அமைப்பதற்கான செலவுகள் அதிகமாகவுள்ளதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையினை விட அதிகளவான செலவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் துணைத்தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் நிதியின் அளவினை அதிகரிக்க நடவடிக்கையெடுப்பதாக துணை தூதுவர் உறுதியளித்தார்.

அத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறைக்கு தேவையான உதவிகள் மற்றும் நிறுவகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கவும் துணைதூதுவர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் துறைத்தலைவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த துணைத்தூதுவர்,

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்திற்கான திட்ட மொழிவுகள் எங்களுக்கு வந்துள்ளது.

அந்த திட்டமுன்மொழிவுகளின் செலவுகள் தற்போதைய விலை அதிகரிப்பு காரணமாக அதிகரித்துள்ளது.அதன்காரணமாக ஏற்கனவே வழங்கிய திட்டமொழிவினை எவ்வாறு கொண்டுசெல்வது என்பது குறித்து கலந்துரையாடினோம்.

அத்துடன் புத்தகங்கள்,இசைக்கருவிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் அதனைப்பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடினோம்.அத்துடன் நேற்று தமிழக அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டன.
இந்திய அரசாங்கம் இலங்கையில் எந்த மாகாணத்தினையும் பிரித்து பார்க்கவில்லை.

இலங்கை மக்களின்கோரிக்கைக்கு அமைவாக தமிழ் நாட்டின் நிவாரணங்கள் கூட இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

பிற செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!

மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!

கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!

இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *