ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப்பெற்றுக் கொண்டுள்ள காரணத்தினால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோருக்கு செயற்குழுக் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.