
யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சுபாஸ்கரன் யாழ் .பேக்கரியின் உற்பத்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார் .
அந்தவகையில் அவர் மேலும் கூறுகையில்,
யாழ் பேக்கரி உற்பத்திகள் நிலையங்களுக்கு பிரேமா (prema )நிறுவனம் கோதுமை மாவினை வழங்குவதற்குரிய ஒழுங்குகளை செய்து கட்டமைப்பின் அடிப்படையில் பெற்றுத்தருகின்றமையினால் தட்டுப்பாடு என்பது குறைவாக உள்ளது.
பாணின் பாவனை குறைந்துள்ளதால் கோதுமை மாவின் தட்டுப்பாடு தெரிவியவில்லை. யாழில் பாணின் விலை அதிகரிப்பினால் அதன் பாவனை 40% குறைந்துள்ளது .
சாதாரணமாக 60 – 65 ரூபா விற்ற பாண் தற்போது 180 ரூபா வரைக்கும் அதிகரித்துள்ளது.
இதனால் மாவினை தரும் நிறுவனம் தற்போது 40% குறைத்து 60% சதவீதமாக தொடர்ச்சியாக தருகின்றது.
தரவுகளின் அடிப்படையில் யாழினை பொறுத்த வரையில் எந்த பேக்கரியும் மூடப்பட்டதாக தெரியவில்லை.
அத்துடன் பாண் உற்பத்தியினை நிறுத்தியதாகவும் தகவல் இல்லை ஆனால் பாண் உற்பத்தி குறைந்துள்ளது .
பேக்கரியின் உரிமையாளர்களின் வருமானம் குறைந்துள்ளதால் பேக்கரி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது – என்றார் .
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்