உச்சக்கட்ட பரபரப்பில் இலங்கை; முதலாவது பட்டினி சாவு பதிவாகியது!

இலங்கையில் நிரவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைகளும் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் ஒரு வேளை உணவை தயாரிப்பதற்கு கூட பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேவேளை நாட்டில் விரைவில் உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடிய ஏதுநிலை உருவானும் என பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செங்கலடி புதிய வீதி கொம்மாதுறையைச் சேர்ந்த 69வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் வீட்டிலிருந்து வெளியேறி சுமார் ஆறு நாட்கள் உண்ண உணவின்றி மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்த நிலையில் பசியின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!

மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!

கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!

இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *